Published on 17/09/2021 | Edited on 17/09/2021
தமிழகத்தில் கடந்த காலங்களில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாகச் செய்தி வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள அந்த தகவலில், கடந்த 2010-11ம் ஆண்டுகளில் 3.56 கோடி, 2011-12ம் ஆண்டுகளில் 1.12 கோடி, 2012-13ம் ஆண்டுகளில் 103.64 கோடி, 2013-14ம் ஆண்டுகளில் 64.4 கோடி, 2019-20ம் ஆண்டுகளில் 64.44 கோடி நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விற்பனை பற்றி சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் ஆர்டிஐ-யில் கேட்ட கேள்விக்கு டாஸ்மாக் நிர்வாகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் துறைகளில் ஒன்றான டாஸ்மாக்கில், நஷ்டம் எவ்வாறு வந்திருக்கும் என்று கேள்வியும் எழாமல் இல்லை.