Skip to main content

நேற்று ஒரே நாளில் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனை?

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
ccc

 

தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந் தேதி முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 6-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 

 

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதனால் முதல் நாள் சனிக்கிழமையே மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

 

அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மதுப்பிரியர்கள் அதிகம் குவிந்ததால் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மதுரையில் அதிகபட்சமாக 42 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகவும், திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

 

இதேபோல் கோவை மண்டலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 21 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை ஐந்து மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மண்டலத்தில்தான் அதிக விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்