தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணி, நாட்றம்பள்ளியில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், பெனுகொண்டாபுரத்தில் தலா 4 செ.மீ மழை பதிவானது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 28- ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ள நிலையில், 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.