Published on 18/06/2020 | Edited on 18/06/2020
ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,
"ஜூலை முதல் வாரத்தில் 12- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். கரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகியுள்ளது; இம்மாத இறுதிக்குள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். பாடத்திட்டம் குறைக்கும் பணி நடக்கிறது; சூழ்நிலைக் கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதல்வர் முடிவெடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11- ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.