Skip to main content

இந்தி மற்றும் ஆங்கில உரைகளை மொழிபெயர்க்கக் கூறி சபாநாயகரிடம் மனு அளிக்க தமிழக எம்.பிக்கள் திட்டம்!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலும்  இந்தி அல்லது ஆங்கில மொழியில் உரையாற்றுகின்றனர். இந்த இரு மொழியும் இல்லாமல் தங்கள் தாய் மொழியில் பேசும் உறுப்பினர்களின் உரையானது, மொழிபெயர்ப்பு செய்து இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மற்ற உறுப்பினர்களுக்கு ஒளிபரப்படுகிறது. இதன் மூலம் தாய்மொழியில் பேசும் எம்.பிக்களின் உரையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை அறிந்தவர்கள் எளிதாக புரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரையை மொழி பெயர்ப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழி பிரச்சனை காரணாமாக தவிக்கின்றனர்.

 

 

dmk mps

 

 

குறிப்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தாய்மொழியை மட்டும் அறிந்த பிற மாநில உறுப்பினர்கள் என அனைவரும் முக்கிய விவாதங்களின் போது அமைச்சர்களின் உரையை புரிந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மொழி பிரச்சனை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற எம்பிக்கள் மற்றும் பிற மாநில உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகரிடம் விரைவில் மனு அளிக்கப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்