Skip to main content

மயங்கி விழுந்த தேர்தல் அலுவலர்... வாக்கு எண்ணிக்கையே தொடங்கப்படாத திருவாரூர்

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 

tamilnadu local election


ஈரோட்டு குருமந்தூரில் வாக்கு எண்ணும் அலுவலர் சரவணன் உடல்நல குறைவின் காரணமாக மயங்கி விழுந்ததார். மயங்கி விழுந்த அலுவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு பெருந்துறையில் 48 தபால் ஓட்டுக்களில் 8 வாக்குகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் சித்தனூரில் வாக்கு எண்ணும் அதிகாரிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.காலை உணவு வழங்கப்படாததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருவாரூரில் இதுவரை  வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்