Published on 06/11/2020 | Edited on 06/11/2020
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஏற்கனவே சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.