7.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா ராஜபவனுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார். இதனால் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டமானது. இதையடுத்து 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நிலையில், மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதனால், விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.