Published on 04/06/2021 | Edited on 04/06/2021
தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறித்து பார்ப்போம்!
1977- ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை கிராமத்தில் பிறந்த ஹசன் முகமது ஜின்னா, 1996- ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கண்ணகி சிலை இடிப்பு வழக்கு, கல்லூரி மாணவி ஷரிகாஷா வழக்கில் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகியுள்ளார். யுனெஸ்கோவின் ஆசிய- பசுபிக் மண்டல மையத்தின் ஆலோசகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் ஆவார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒப்புதல் நடைமுறைக்குப் பின் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.