
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7,814 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது.
1,72,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 7,817 ஆக உள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 904 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. கரோனாவால் மேலும் 182 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,197 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 106 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 76 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 69,732 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 17,043 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,21,928 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் 30- வது நாளாக ஒரு நாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு 1,000- க்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.