கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 59,023 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும், 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.