Published on 04/10/2020 | Edited on 04/10/2020

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக முதல்வர் பழனிசாமி நாளை (05/10/2020) மாலை 05.00 மணிக்கு சந்திக்கிறார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து, ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று தகவல் கூறுகின்றன.
அதேபோல், முதல்வருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.