மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஏற்கனவே ஜூன் 30- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உள்ளது. அதேபோல் கரோனா அதிகரிப்பால் தேனி, மதுரை மாவட்டங்களிலும் ஜூன் 30- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.