கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (23/04/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தினமும் இரண்டு லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால், தமிழகத்திற்கு 10 நாட்களுக்குத் தேவையான 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் மாநிலங்கள், தங்கள் மாநிலத்திற்குள்ளாகவே மருந்துகளை அனுப்பிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு தவறானது. ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். செங்கல்பட்டில் செயல்பட தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, மேலும் இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து சென்னைக்கு இன்று (23/04/2021) வருகிறது.