தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/07/2021) அறிவித்தார். மேலும், ஜூலை 5- ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அமலுக்கு வருகின்றது.
எதற்கெல்லாம் தடை தொடரும்? என்பது குறித்து பார்ப்போம்!
மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்களுக்கு தடை தொடரும்.
பொதுமக்கள் கலந்துக் கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்தக் கூட்டங்களுக்கும் தடை தொடரும்.
கரோனா பாதிப்புள்ள பகுதிகளில் தீவிரமாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் குழுக்கள் அமைத்து வீடு வீடாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.