Skip to main content

தடைகளை தகர்க்கும் விநாயகருக்கே தடையா? விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தேவை-பாஜக முருகன் கோரிக்கை

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
tamilnadu bjp leader murugan

 

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்ல தடை விதித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தி, கரோனா காலத்தில் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது என்பதால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

 

tamilnadu bjp leader murugan

 

 

இந்நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார். தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடையா?  பல்வேறு பணிகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்