Published on 22/08/2020 | Edited on 22/08/2020

சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டத்தை நடத்துவது பற்றி தமிழக சட்டப்பேரவை சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு செய்தார். சபாநாயகருடன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துக்கொண்டனர்.
கரோனா அச்சறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 24- ஆம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பதால் சபாநாயகர் இத்தகைய ஆய்வை மேற்கொண்டதாக தகவல் கூறுகின்றன.
ஆய்வு செய்த பின் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், "சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.