தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என பல பிரச்சனைகள் எழுந்துள்ளநிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வரும் 28 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக சட்டமன்றம் கூடியது.மேலும் பட்ஜெட் மீதான விதமும் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் மானிய கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்த வரும் 28 ஆம் தேதி சட்டப்பேரவை கூவிடவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மரபுப்படி 25 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும்.
சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள நிலையில் பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.