காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் மிக உன்னதமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் தீரமிகு செயலில் ஈடுபட்டிருந்த போது, வீரமரணம் அடைந்த இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.