Published on 01/09/2020 | Edited on 01/09/2020

வரும் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை அலுவலகச் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டபேரவை கூட்டத்தொடர் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரோனா காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நடத்தப்படுகிறது. எத்தனை நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.