கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராய மரணத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கண்டம் தெரிவித்தனர்.
இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கூடியது. அதில் மதுவிலக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இல் திருத்தம் செய்து, கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு வாக்கு எடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கு மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.