தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி நிதியைப்பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அறிக்கயில் அவர் தெரிவித்திருப்பதாவது: ’’மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.1765.62 கோடி மற்றும் ரூ.31.02 கோடி மலைவாழ் மாணவர்களுக்கும், வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என வழக்கறிஞர்கள் உயர்நீதி மன்றத்தை அணுகி உள்ளனர். இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1547.56 கோடி நிலுவை தொகை உள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள நிதியை உடனடியாக பகிர்மானம் செய்ய உரிய விவரங்களையும், சம்பந்தப்பட்ட சான்றுகளையும் பெற்று நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இது குறித்து முன்பே பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட நிலையிலும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாநில அரசு உரிய ஆவன அறிக்கை விவரங்களை, மத்திய அரசிற்கு அனுப்பி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணவர்கள் கல்வி நலனை மேம்படுத்த நிதியைபெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’’