Published on 16/06/2022 | Edited on 16/06/2022
ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 14 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் அரசு ஊழியர்களைப் போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவிகிதம் அகவிலைப்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 19,658 விற்பனையாளர்கள், 2,752 கட்டுநர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி ஒன்று முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 22,510 பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதன் மூலம் அரசுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.