உடல் தகுதிதேர்வில் முறைகேடு: மதுரை போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
மதுரையில் போலீசார் உடல் தகுதிதேர்வில் முறைகேடு செய்யப்பட்டதாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல்நிலை காவலர் மருகேசன், போலீஸ் அமைச்சு பணியாளர்கள் பாலமுருகன், சரவணன், ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தகுதி தேர்வில் கயிறு ஏறாத 4 பேரை தேர்வானதாக டிஐஜியிடம் கையெழுத்து பெற முயன்றதாக மூன்று பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த27-ம் தேதிமுதல் நேற்று ஆக.,9 வரையில் காவலர் தேர்வு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.