ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற அரிய நோக்கில் சிதம்பரம் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னே நந்தனார் கல்வி கழகத்தை நிறுவியவர் சுவாமி சகஜானந்தா. இவரது கல்விபணியை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இடத்தில் தமிழக அரசு 1 கோடியே 25 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டிகொடுத்துள்ளது.
சுவாமியின் 59 வது குருபூஜை விழா அவர் மறைந்த இடமான ஓமக்குளத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நந்தனார் கல்விக்கழக தலைவர் மருத்துவர் சங்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கல்விக்கழக உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். பள்ளியில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் காலை முதல் மாலை வரை சுவாமியின் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் அனைவரும் அவரது சிலையின் முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். கல்விக்கழக உறுப்பினர்கள் வினோபா, இளைய அன்பழகன்,மணிவேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் விமலகுமார்,பன்னீர்செல்வம், தேமுதிக கட்சி சார்பில் உமாநாத், சகஜானந்தா சமூக பேரவை சார்பில் நீதிவளவன், திருவரசு. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாதவன்,நகரசெயலாளர் ராஜா. தமிழ்மாநில காங்கிரஸ் பாலமுருகன்,பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அம்பிகாபதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் சுவாயின் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் மணிமண்டபத்திலிருந்து ஊர்வலமாக வந்து ஓமக்குளத்திலுள்ள அவரது மறைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.