'நிவர்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையின் குடிநீர்த் தேவைக்கு ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியிலிருந்து தற்பொழுது முதல் முறையாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியிலிருந்து தற்பொழுது 1,000 கனஅடி உபரி நீர் முதல்கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பூண்டி ஏரியில் நீர் திறந்து வைத்தனர். பூண்டி ஏரியின் 10, 12 எண் கொண்ட இரு மதகுகளில் தலா 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தைப் பொறுத்து, பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகபட்சம் 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கலாம் எனத் தவகல்கள் வெளியாகியுள்ளது. பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.