இன்று சட்டமன்றத்தில் புதுக்கோட்டை திருமயம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ரகுபதி.. டாஸ்மாக் கடைகளில் பார்களுக்காண டெண்டர் இல்லாமல் பார்கள் நடத்தப்படுகிறது. பார்கள் ஏலம் விட்டால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஏலம் எடுக்க தயாராக உள்ளனர் என்றார். அதற்கு பதில் சொன்ன அமைச்சர் பூரண மது விலக்கு வேண்டும் என்று சொல்லும் தி.மு .க பார் நடத்துவதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று பேசியுள்ளார். மேலும் அனைத்து பார்களும் அனுமதியுடன் தான் செயல்படுகிறது. அனுமதி இல்லாமல் இயங்கும் பார்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கலால் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கிளம்பினார்கள்.
அதில் டாஸ்மாக் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் வேலுசாமி , புதுகை டி.எம். செளந்தர பாண்டியன் தலைமையில் பல குழுக்கள் சோதனை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 டாஸ்மாக் கடைகளில் 28 பார்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மற்ற 90 பார்களுக்கு அனுமதி இல்லாமல் நடக்கிறது. அந்த அனுமதி இல்லாத பார்களில் பல துறைகளும் வசூல் குவிக்கிறதாம். இதில் மதுவை ஒழிக்கிற சீருடைக்காரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் அதிகம் வசூல் வேட்டையாடுவது இப்போதைய திடீர் சோதனையில் தெரிய வந்துள்ளது.