Skip to main content

ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி தருவதை கண்டித்து ஆண்டிபட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் சுப்புலாபுரம். எஸ் எஸ் புரம். முத்து கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் 1500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பயன்படுத்தி நெசவு செய்து வருகின்றனர். தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் இங்கு நெய்யப்படுகின்றன மேலும் சாமி வேஷ்டிகள் துண்டுகள் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் நெசவு செய்யப்பட்டு திருப்பூர்.கோவை.ஈரோடு உள்பட சில வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 

 Sudden strike by weavers at Antipatti!

 

இதுமட்டுமின்றி இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் வெளிநாடுகளிலும் நல்ல மவுசு உள்ளது அப்படி இருக்கும்போது சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வெளி நபர்கள் பணம் கேட்டு நெசவாளர்களை மிரட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் கூட தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விடம் நெசவாளர்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இதனால் மனம் நொந்து போன ஒட்டுமொத்த நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
             

இது சம்பந்தமாக கைத்தறி சங்க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, கடந்த சில வாரங்களாக சமூக ஆர்வலர் என்ற பெயரில் சாய தொழிலுக்கு நெருக்கடி தந்து வருகின்றனர். எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை புகார் கொடுத்துள்ளனர் காட்டன் துணியை கைத்தறியிலும் மற்ற ரகங்களை விசைத்தறியி லும் நெய்ய வேண்டும் என்பது விதி நாங்கள் பாலிஸ்டர் கலந்த காட்டன் ரகங்களை தான் விசைத்தறியில் நெய்து வருகிறோம். ஆனால் தொடர்ந்து புகார் அனுப்புவதால் அதிகாரிகளும் அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக நெருக்கடி தருகின்றனர். ஆரம்பத்தில் 21 ரகங்களை கைத்தறியில் மட்டுமே நெய்ய வேண்டும் என்ற விதி இருந்தது தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சிலர் தொடர்ந்து புகார் அனுப்பி வருகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவத்தை கண்டித்து தான் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.
 

இப்படி திடீரென நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி நடவடிக்கை எடுத்து நெசவாளர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.