நீட் தேர்விற்கு எதிராக ஓமந்தூரார் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறது மத்திய அரசு, இந்த நீட் தேர்வினால் பல்லாயிரக்கணாக்கான தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சுக்குநூறாக தகர்க்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்து ஓமந்தூரார் மாளிகை முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
படங்கள் - அசோக்குமார்