மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் "கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்" (Kendriya Vidyalaya Schools) இந்தியா முழுவதும் சுமார் 1128 பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இதில் தமிழகத்தில் சென்னை , கோவை , கல்பாக்கம் , தர்மபுரி , அரக்கோணம் , திருச்சி உட்பட பல மாவட்டங்களில் 42 பள்ளிகள் இயங்கி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (Kendriya Vidyalaya Schools) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிகளில் 2019- 2020 ஆண்டுக்கான (Admission) மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இதன் படி ஒன்றாம் வகுப்பிற்கான விண்ணப்ப விநியோகம் 01/03/2019 அன்று காலை 8.00 AM மணி முதல் தொடங்கும் எனவும் , விண்ணப்பிக்க கடைசி நாள் 19/03/2019 அன்று மாலை 4.00 PM மணிக்கு நிறைவடையும் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயக்குநரகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கும் நாள் 02/04/2019 அன்று காலை 8.00 AM மணி முதல் 09/04/2019. அன்று மாலை 4.00 PM மணி வரை விண்ணப்பிக்கலாம் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயக்குநரகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல் இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பிற்கு (1st Standard) விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : https://kvsonlineadmission.in . இரண்டாம் வகுப்பு (2nd Standard) முதல் பதி்னொன்றாம் வகுப்பு (11th standard) வரை விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : www.kvsangathan.nic.in ஆகும். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மொபைலில் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மொபைல் செயலியை (Mobile Application) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : https://kvsonlineadmission.in/apps/. மேலும் இது தொடர்பான முழு விபரங்களுக்கு இணைய தள முகவரி : www.kvsangathan.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை அறிந்து கொண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கென தனி ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகை பள்ளிகளில் முன்னால் ராணுவ வீரர்கள் , மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் , மத்திய அரசு ஊழியர்கள் , மத்திய விமானப்படை ஊழியர்கள் , மத்திய ரயில்வே துறை ஊழியர்கள் உட்பட அனைத்து மத்திய அரசின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தான் சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தில் புதியதாக நான்கு பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பள்ளியில் (Right To Education Act -2009 ) சட்டத்தின் கீழ் ஏழை , எளிய குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இதற்காக 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த பள்ளிகள் குறித்து தமிழக மக்களுக்கு அதிகளவிற்கு தெரியாது. இனி வரும் காலங்களில் இது குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
பி.சந்தோஷ் ,சேலம்.