Skip to main content

கோவை பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
STU


கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் சஞ்சய் பிரசாத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 18 வயது மகன் சஞ்சய் பிரசாத் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு உற்பத்தி துறை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வகுப்பில் சஞ்சய் பிரசாத்திற்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைபார்த்த கணினித்துறை பகுதி நேர ஆசிரியர் முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் இருவரையும் திட்டியதோடு, பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதி அளிக்கப்படுமென முருகன் கூறியுள்ளார். பெற்றோரை அழைத்து வர பயந்த சஞ்சய் பிரசாத்தினை கடந்த வாரம் முழுவதும் வகுப்பிற்குள் விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16 ம் தேதி திருப்பூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு சஞ்சய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் வைரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து முதல்வர் வைரம் உத்தரவிட்டார். மாணவர் சஞ்சய் பிரசாத் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் எனவும் கல்லூரி முதல்வர் வைரம் தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் தினேஷ், மனோஜ் ஆகிய இருவர் மீது மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பயிற்சி மையங்களில் தொடர் தற்கொலை; ராஜஸ்தான் அரசு எடுத்த முடிவு

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Rajasthan Govt decision taken prevention  Serial suicides in training centers 

 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிகளை தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். 

 

இந்த நிலையில், இந்த மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெரும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இங்கு பயிலும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வேளையில், இந்து ஆண்டில் தற்போது வரை 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றன. அதிலும் நேற்று முன் தினம் மட்டும் தொடர்ந்து இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கு உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வாராந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

அதேபோல், பீகார் மாநிலத்தை சேர்ந்த 18 வயதான மாணவர் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து தொடரும் தற்கொலைகளை தடுக்கும் விதமாக கோட்டா மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தவித தேர்வும் நடத்தக்கூடாது என்று ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தாங்கும் விடுதிகளில் ஸ்ப்ரிங் வடிவிலான மின்விசிறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பயிற்சி மையங்களுக்கு கோட்டா மாவட்ட கலெக்டர் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு அளிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இதற்கிடையில், ஜெய்ப்பூரில்  நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷி, "கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான அழுத்தம் இருப்பது உண்மைதான். தங்களுக்காக பெற்றோர் பெற்றுள்ள கல்விக் கடன் தொடர்பான மன அழுத்தத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் கல்விக்கடன் வாங்க தேவை இல்லாத வகையில்  ஒரு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்று கூறினார். 

 

 

 

 

Next Story

ஐஐடி மாணவி தற்கொலை... மத்திய குற்றப்பிரிவின் சிறப்புக்குழு விசாரிக்கும்- காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டி! 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். 

 

 IIT issue... Central Crime Special Committee investigates!

 

அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில் ஐஐடி மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி முன்பு இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் உதவி ஆணையர் சுதாகர் இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபட்டார். இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. 

 

pp

 

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், மாணவி பாத்திமா லத்தீப் இறந்தது சென்சிடீவ் விஷயமாக உருவெடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டோம். தற்போது இந்த வழக்கை லோக்கல் காவல்துறை விசாரணையில் இருந்து மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றுகிறோம். இந்த வழக்கை விசாரிக்க அடிஷனல் கமிஷனர் ஆப் சென்ட்ரல் க்ரைம் பிரான்ச் தலைமையில் ஒரு சிறப்பு குழு உருவாக்கப்படவுள்ளது. புலன் விசாரணை அதிகாரியாக மெஹலினா தொடர்வார்கள். விரைவில் புலன் விசாரணையை முடித்து உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்றார்.

மேலும், பேராசிரியர் பெயர் ஒன்று அடிபடுகிறதே அவரிடன் புலன் விசாரணை நடைபெற்றதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் புலன் விசாரணை குறித்த எந்த தகவலும் இப்பொழுது வெளியே சொல்ல முடியாது என்றார்.

 

IIT