காவிரி வழக்கில் மத்திய அரசின் வாதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது: பி.ஆர்.பாண்டியன்
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திசை திருப்புவதா? நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்பதா? இல்லையா? என்பதை பாராளுமன்றம் தான் முடிவு செய்யும் என்ற மத்திய அரசின் வாதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
இந்தியபாராளுமன்றம் சட்டத்தை உருவாக்க மட்டுமே முடியும் அதனை செயல்படுத்த வேண்டியது நீதிமன்றங்களே. எனவே நீதிமன்ற உத்திரவுகளை பாராளுமன்றம் விசாரிக்கும் என்ற வாதம் இந்திய அரசியலமைப்பு சட்டத் திற்க்கு முரணானது.
காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றத்திற்க்கு இணையான அதிகாரத்தோடு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் தடை விதிக்கவோ, மறு விசாரணை நடத்தவோ உச்சநீதிமன்றத்திற்க்கு அதிகாரம் இல்லை. தேவையானால் நடுவர் மன்றத்திலேயே மறுசீராய்வு மனு தாக்கல் செய்துக்கொள்ளளாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைத்து செயல்படுத்துவது மட்டுமே இந்திய அரசு, பாராளுமன்றத்தின் கடமையாக இருக்க முடியும்.
இல்லையேல் நீதி பரிபாலனத்தையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மத்திய அரசே குழி தோண்டி புதைப்பதற்க்கு சமமாகும். மத்திய அரசின் வாதம் கண்டனத்திற்க்குறியது. கூட்டாட்சி தத்துவத்திற்க்கு எதிரானது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.