அறிவாலயத்தில் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்த மாவட்ட வாரியான தி.மு.க.வின் கட்சி நிர்வாகிகளின் கள ஆய்வுக்குப் பின்பு. கட்சி மட்டத்தில் மாநிலம் முழுவதிலும் நிர்வாகிகள் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் மாற்றப்பட்டனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 9 ஒ.செ.க்கள் ந.செ.க்கள் மாற்றப்பட்டனர்.
இதில் குறிப்பிடும்படியான 6 ஒ.செ.க்களைக் கொண்ட நெல்லை கிழக்கு மாவட்டத்தில் நான்கு ஒ.செ.க்கள் அதிரடியாகத் தூக்கப்பட்டனர். அதனால் அங்கு கட்சி ரீதியாகத் உ.பி.க்களிடையே கிளம்பிய மனத் தாங்கலைக் கடந்த வாரம் நக்கீரன் இணையதளத்தில் வெளிப்படுத்தியிருந்தோம்.
இதைத் தொடர்ந்து சிவபத்மநாபனை மா.செ.வாகக் கொண்ட நெல்லை மேற்கு மாவட்டத்திலும் குருவிகுளம் வடக்கு ஒ.செ. சேர்மத்துரை மாற்றப்பட்டு கிறிஸ்டோபரையும், மேலநீலிதநல்லூர் ஒ.செ. ராஜவுக்குப் பதிலாக விஜயகுமாரும், ஆலங்குளம் வடக்கு ஒ.செ. சூட்டுச்சாமிக்குப் பதிலாக அன்பழகனையும், சங்கரன்கோவில் ந.செ.சங்கரனுக்குப் பதிலாக ராஜதுரை போன்றவர்களை தலைமை நியமிக்க மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
இவர்களில் கட்சிப் பிடிப்போடு செயல்படும் மே.நீ.ந. ஒ.செ. ராஜா கடந்த வாரம்தான் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவினை ஊர் மெச்ச நடத்தினார் ஆனால் அவர் மாற்றப்பட்டது அதிர்ச்சியாக இருக்கு. காரணம் சொல்லப்படவில்லை. என புழுங்குகின்றனர். அந்தப் பகுதியின் கட்சியினர்.
அடுத்து சங்கரன் கோவில் நகரின் பெரும்பான்மை சமூகத்தவர்களைச் சேர்ந்தவரான தி.மு.க. ந.செ. சங்கரன் மாற்றப்பட்டதால், வழிவழியாகத் தரப்படும் முன்னுரிமை போய் விட்டதாக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு தி.மு.க.விற்கு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தி போஸ்டர் ஒட்டினர் அந்தச் சமுதாயத்தின் நிர்வாகிகள்.
மேலும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தவும், தங்களின் நிலைப்பாட்டைத் தலைமைக்கும், செயல் தலைவருக்கும் தெரிவிக்கும் வகையில் நகரத்தின் கட்சியினர் பிரதிநிதிகளடங்கிய சுமார் 30 பேர்கள் அறிவாலயம் சென்றும் முறையிட்டுள்ளனர். அதோடு பதவி பறிக்கப்பட்டோர்களின் அணியும் தலைமையிடம் நிலையை விளக்கியுள்ளனர்.
தொடர்ந்து மே. மாவட்டத்தின் புளியங்குடியிலும் இருகோஷ்டிகள். அங்கு மா.செ. மற்றும் அவருக்கு எதிரானவர்கள் என்று இரண்டு கோஷ்டிகளாகக் கட்சியில் செயல்படுவது ஆரோக்கியமான ஜனநாயகமல்ல என்று புளியங்குடி நகர கட்சி மட்டத்திலிருந்து தி.மு.க.வின் தலைமைக்குப் பல புகார்கள் போயுள்ளன. ஆனால் அவைகள் கவனிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டுகின்றனர். உ.பி.க்கள்.
இந்நிலையில் புளியங்குடியில் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு மாநில கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை து.செ. திண்டுக்கல் லியோனியின் சிறப்புரை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இரண்டு கோஷ்டிகள் சார்பிலும் இருவேறு நோட்டீஸ்கள் அச்சடித்து வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்று மா.செ. சிவபத்மநாபன் தலைமை என்று அதில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. மற்றொன்றில் தி.மு.க. ந.செ. செல்வக்குமார் தலைமையில் லியோனி சிறப்புரை என்று அவர் சார்பில் அச்சிடப்பட்டதில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இப்படி இருவேறு நோட்டீஸ்கள் நகர தி.மு.க.விலிருந்து வெளியிடப்பட்டது நகரை மட்டுமல்லாமல் கட்சித் தொண்டர்களையும் குழப்பியதோடு, இரண்டு கோஷ்டிகளிருப்பதையும் உறுதிப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் கடந்த 8ம் தேதி புளியங்குடியில் ந.செ.செல்வக்குமார் தலைமையில் நடந்த கலைஞர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் லியோனி சிறப்புரையாற்றினார், அதில் மே. மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. புளியங்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தின் மூலம் வெளிப்பட்ட அம்மாவட்ட தி.மு.க.வில் விரிசல், கோஷ்டிப் பூசல்கள், கட்சித் தொடண்டர்களிடையே அதிருப்தியையும், மனத்தாங்கலையும் ஏற்படுத்தத் தவறவில்லை. மேலும், இந்தப் பொதுக் கூட்டம் தொடர்பான விவரத்தை கட்சியின் இரு அணிகளும், கட்சித் தலைமையிடம் முறையிட்ருப்பதாகவும் சொல்கிற உ.பி.க்கள்.
மாவட்டங்கள் அளவில் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகளின் மாற்றங்களால் மாவட்ட உடன் பிறப்புகள் மத்தியில் நிலவுகிற அதிருப்தியும், மனப் புழுக்கமும் சூறாவளியாய் சுற்றியடிப்பது. கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதையும் தெரிவிக்கின்றனர். நடுநிலையான தொண்டர்கள்.