Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்படுவதாக தகவல்.. அதிகாரிகள் ஆய்வு: சந்தீப் நந்தூரி

Published on 17/06/2018 | Edited on 17/06/2018


ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடா்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தூத்துக்குடி ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி அமைதியான முறையில் போரட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி, தூப்பாக்கிச்சூட்டில் 13பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக முதல்வர் எடப்பாடி அரசாணை வெளியிட்டார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவியும் அறிவித்தார்.
 


 

 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த ரசாயனக் கசிவு தகவல்கள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்,

ஸ்டெர்லைட் ஆலையால் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரசாயனக் கழிவு என்ற தகவல் குறித்து தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது.

ரசாயன கசிவு தொடர்பாக வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்