தமிழகத்தில், கடந்த ஆண்டை விட,
இந்தாண்டு சாலை விபத்து குறைவு
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைந்துள்ளது. மேலும், விபத்துகள் குறைய, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என, பொதுமக்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழகத்தில், சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சாலை விபத்துகள் குறைந்துள்ளன. 2016 ஜன., - ஆக., வரை நடந்த விபத்துகளை விட, இந்தாண்டு ஜன., - ஆக., வரை, 3,899 சாலை விபத்துகளும், 319 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.
விபத்துகளை மேலும் குறைக்க, சிவப்பு விளக்கை தாண்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; வாகனத்தை இயக்கும் போது, மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.