திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது
எழுந்து நிற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். அந்த மனுவில் மால் மற்றும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒரு சிலர் எழுந்து நிற்காமல் அவமதிக்கின்றனர்.அ வர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கைகளில் அறிக்கை கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். மேலும் மதுபான கடை ஆயுத பூஜை வருமானம் 11 கோடி ரூபாய் பத்திரிக்கைளில் செய்தி பெரிய அளவில் வருவதைப்போல மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிக்கையும் தேசியக்கொடி அவமதிப்பு குறித்து இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர் மணிகண்டன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
-அருள்