தனிப்பட்ட பிரச்சனைகள், விருப்பு வெறுப்புகளுக்கு அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை திமுக என்றுமே ஏற்றுக்கொள்ளாது, அதேபோல் பெண்களின் மாண்புக்கு கலங்கம் உருவாக்கும் வகையில் நடந்துகொண்டால் தங்குந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு ட்விட்டர் பதிவில் எச்சரித்துள்ளார்.
பெரம்பலூரில் உள்ள பியூட்டி பார்லரில் புகுந்த ஒரு நபர், அங்கு உள்ள ஒரு பெண்ணை காலால் உதைக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்புகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் தாக்குதல் நடத்துவது திமுக நிர்வாகி என தெரிய வந்ததும், அவரை தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் தனிப்பட்ட பிரச்சனைகள், விருப்பு வெறுப்புகளுக்கு அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை திமுக என்றுமே ஏற்றுக்கொள்ளாது, அதேபோல் பெண்களின் மாண்புக்கு வரம்பு மீறி கலங்கம் உருவாக்கும் வகையில் நடந்துகொண்டால் தங்குந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் எச்சரித்துள்ளார்.
தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) September 13, 2018