பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றம் தொடங்கியதில் இருந்து அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்றம் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக இன்று காலை அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாத்தில் காந்தி சிலை முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மக்களவை துணை சபாநாயகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,
37 எம்பிக்களை கொண்ட அதிமுகவால் எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரமுடியும்?. காங்கிரஸ் ஆதரித்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயார். அதற்கு மு.க.ஸ்டாலின் தான் காங்கிரசிடம் கூறி ஆதரவு தர சொல்ல வேண்டும்.
ஆந்திர கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க சொல்கிறார். தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு கூறுகிறாரா ஸ்டாலின்? கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசியல் சித்து விளையாட்டுக்காகவும் எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைய 29ஆம் தேதி வரை பொறுத்திருப்போம். அதிமுக எம்.பி.க்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.