Skip to main content

''பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்''- எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

 Stalin mourns MP Vasantha Kumar's death

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 9 -ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு கரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் காலமானார். 

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு  தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் இலக்கணமாகத் திகழ்ந்தவர் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார். கரோனா என்ற கொடிய நோய் வசந்தகுமாரை நம்மிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றுவிட்டது. முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர் வசந்தகுமார். இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முன்னுதாரணமாக விளங்கியவர் வசந்தகுமார். பொதுவாழ்வில் இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு காங்கிரசுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்