தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை இயல்புக்கு மாறாக அதிகப்படியான அளவு பொழிந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதீத கனமழை பொழிவு இருந்தது. சென்னையில் மற்ற மாவட்டங்களைவிட அதிக பாதிப்பு இருந்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து என்பது பெரிதும் தடைப்பட்டது. தற்போது மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரங்களை அகற்றுதல், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 நாட்கள் தொடர்ந்து சென்னை மழை சேதப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பாதிப்பு தொடர்பான ஆய்வை முடித்திருந்த நிலையில், தற்போது டெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்நிலையில், இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மக்கள் மீது கொண்ட அக்கறையை விட வேறு எந்த சக்தியும் பெரிதல்ல, மு.க. ஸ்டாலின் தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார், அவரது பணி சிறக்கட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.