கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, வடக்குப் பம் மற்றும் எருமனூர் கிராமங்கள் இடையே விருத்தாசலம் - சேலம் செல்லும் ரயில் பாதைக்கான ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. மழைைக்காலங்களிலும், அதற்கடுத்த நாள்களிலும் தண்ணீீர் தேங்குவதால் அப்பகுதி விவசாயிகள், மாணவர்கள் அவ்வழியை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட 5 ஆண்டுகளாக பொதுமக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டும், சேலம் ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சுரங்கப் பாதையில் உள்ள தண்ணீரில் இறங்கி, நிரந்தர தீர்வு வேண்டும் என்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பள்ளி மாணவர்கள் சீருடையுடன் சுரங்கப்பாதை தண்ணீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.