எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி ரிசார்ட்டில்
எஸ்.எஸ்.பி திடீர் ஆய்வு..!
எஸ்.எஸ்.பி திடீர் ஆய்வு..!
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் கடந்த 2 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தனது ஆதரவாளர்களுடன் வந்து தினகரன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
தொடர்ந்து இன்று காலை காவல் துறை அலுவலகம் சென்று, தமிழகத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே தங்குவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரஹீம் ஆகியோர் மதியம் 2 மணிக்கு சொகுசு விடுதிக்கு வந்து எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசினார்.
மேலும் பாதுகாப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடாது. அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக ரிசார்டில் ஆய்வு மேற்கொள்ள வந்ததாகவும், எம்எல்ஏக்களை சந்தித்து பேச நான் வரவில்லை. எனவும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜிவ் ரஞ்சன் கூறினார்.
- சுந்தரபாண்டியன்