Skip to main content

பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யு ஆர்ப்பாட்டம்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

SRMU at ponmalai for farmers

 

திருச்சி, ரயில்வே பொன்மலை பணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். 
 


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் பேசுகையில், தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் தற்போது ஊட்டி மலைப் பாதை ரயில் போக்குவரத்து, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 475 ரூபாய் டிக்கெட் வசூலித்த இடத்தில், இன்று 3 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 4.75 லட்சம் ரூபாய், தனியாருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற மத்திய அரசு எடுத்த முடிவைக் கைவிட வேண்டும். 


அதேபோன்று, 4ஆயிரம் டீசலின் சீட்டுகளை ஸ்கிராப் செய்து, அதன் மூலம் 40 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுவதை மத்திய அரசு கருத்தில் கொண்டு தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும். 7 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக்கொண்டு ரயில்வே தொழிலாளர்கள் அனைவரையும் கூலித் தொழிலாளர்களாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கவனத்தில்கொண்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்