திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யூ சார்பில் இன்று ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ரயில்வே துறையில் 20,000 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்காமல், காலிப் பணியிடங்களை ரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமாக, 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற ரயில்வே தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். வார விடுமுறையும், கூடுதல் பணிக்கான அதற்குரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. ரயில்வே தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்பையும் வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் “தமிழகத்தில் ரயில்வே துறையில் உள்ள, 20,000 காலி பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும். காலிப் பணியிடங்களை திரும்ப பெறும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசை ஸ்தம்பிக்க வகையில் அளவிற்கு விரைவில் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளனர்.