Skip to main content

தாதா ஸ்ரீதர் தனபால் உடலை கொண்டுவருவதில் சிக்கல்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
தாதா ஸ்ரீதர் தனபால் உடலை கொண்டுவருவதில் சிக்கல்

சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபால் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீதர் தனபாலின் உடலை பெற்று, இந்தியா கொண்டு வருவதற்காக அவரது மகள் தனலெட்சுமி, வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், விநாயகம் விஷ்னு ஆகியோருடன்  கம்போடியா நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். லண்டனில் தங்கி உள்ள அவரது மகன் சந்தோஷும் கம்போடியா புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டது. 

கம்போடியா தூதரகத்தில் நடத்திய விசாரணையில் ஸ்ரீதர் தனபால் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து எந்த நபரும் கம்போடியாவில் இல்லை என்றும், இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு நபரும் கம்போடியாவில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் போலி விசாவை பயன்படுத்தித்தான் ஸ்ரீதர் தனபால் கம்போடியாவுக்கு சென்றது காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கம்போடியாவில் இறந்தவர் ஸ்ரீதர் தனபாலாக கருதப்படமாட்டார். இதனால் ஸ்ரீதர் தனபால் உடலை சென்னை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அங்கு அவரது உடலை அடையாளம் கண்டார் மகள் தனலெட்சுமி. இதையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டுவர அவரது வழக்கறிஞர்கள் அதற்கான சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

அரவிந்த்

சார்ந்த செய்திகள்