Published on 27/10/2020 | Edited on 27/10/2020

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.