இலங்கை படகில் இருந்து தப்பியவர்களை கண்டுபிடிக்க கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்புதுப்பட்டினம் கடல் கரையில் நேற்று முன்தினம் இலங்கை பதிவு எண் கொண்ட நவீன பைபர் படகு ஒன்ற கரை ஒதுங்கியது. அந்த படகில் யார் வந்தது. எதற்காக வந்தார்கள். ஏன் படகைவிட்டு சென்றனர் என்ற எஸ்.பி. செல்வராஜ் விசாரனை செய்தார்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கரை ஒதுங்கிய இலங்கை படகில் இருந்து 2 பேர் இறங்கிச் சென்றதாக சொன்ன தகவலயடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார் வாகனங்களை நிறுத்தி சோனையில் ஈடுபட்டனர்.
-இரா.பகத்சிங்