தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின், அரசு மருத்துவமனைகளிலுள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். தகுதியற்ற மற்றும் கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துள்ளனர்.

இப்படியாக தமிழ்நாட்டில், ஜனவரி 2019 வரை 4 மாதங்களில் மட்டும், 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையக அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் நாராயணசாமி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் 12-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் மற்றும் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.