நீட்: சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளன. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் வகையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
படங்கள்: அசோக்குமார்