நீட்: கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
நீட் தேர்வை ரத்து செய் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பல கல்லூரி பேராசிரியர்களும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்கள் கல்லூரி வாயில் போராட்டங்களில் ஈடுபட முடியாமல் வெவ்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மா மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்ற மாணவர்கள்.. அடுத்த மாதம் புதுக்கோட்டை வரும் முதல்வர் எங்கள் கல்லூரி மைதானத்தில் பேசுகிறார். அதற்காக பழமையான பார்வையாளர் மாடத்தை அகற்றும் முயற்சியும் நடப்பதாக அறிகிறோம். ராஜிவ்காந்தி, ஜெ, கலைஞர் வரை பேசிய மைதானத்தில் எந்த சேதாரமும் இல்லை. ஆனால் இப்போதைய முதல்வருக்காக சேதாரம் ஏற்படுத்தி பழமையை மறைக்க வேண்டாம் என்றனர்.
இரா.பகத்சிங்